VIVO X50 Pro உலகின் முதல் கிம்பல் பாணியிலான Smart Phone || knowtechtamil ||Tech NEWS
VIVO X50 PRO ஒரு பார்வை
தற்போதைய ஸ்மார்ட் போன் சந்தைப்படுத்ததில் பிராசஸர்க்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிற அம்சம் என்னவென்றால் அது கேமரா தான். அந்த வகையில் விவோ தரப்பில் இருந்து விவோ X-50 PRO என்கிற புதிய ஸ்மார்ட் போனை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதுதான் உலகின் முதல் கிம்பல் ஸ்மார்ட் போன் என்று அறியப்படுகிறது.உலகில் எவ்வளவோ ஸ்மார்ட் போன்கள் வந்திருந்தாலும் விவோ X-50 PRO-தான் உலகின் முதல் கிம்பல் ஸ்மார்ட் போன்.
![]()  | 
| img source VIVO official | 
கிம்பல் என்றால் என்ன? எதுக்கு ? தொழில் நுட்பம்
பொதுவாக கிம்பல் என்றால் போனை வைத்து நுட்பமாக வீடியோவோ அல்லது போட்டோவோ எடுக்க பயன்படும் ஒரு கருவி.ஆனால் இந்த ஸ்மார்ட் போனில் விவோ X-50 PRO அந்த தொழில் நுட்பமானது கேமெராக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான ஒன்று.
இதில் கிம்பல் தொழில் நுட்பமானது ஸ்மார்ட் போனின் உட்பகுதியில் கேமெராவை சுற்றி காணப்படுகிறது. இந்த கிம்பாலானது நாம் எடுக்கும் போட்டோ மற்றும் விடீயோக்களுக்கு தகுந்தாற்போல் அசைந்து கொடுக்கிறது.
இவ்வாறு அசைந்து கொடுக்கும் பட்சத்தில் நாம் எடுக்க கூடிய போட்டோ மற்றும் வீடியோ எந்தவித நடுக்கம் மற்றும் மங்கலாக தெரியாத வண்ணத்தில் எடுக்க உதவுகிறது.
இந்த கிம்பல் தொழில் நுட்பம் புகைப்பட வல்லுநர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனம் என்றே கூறலாம்.
மேலும் இதனுடைய இதர விவரங்களை பார்க்கலாம்.
திரை அளவு 16.66 cm (6.56 அங்குலம் )
திரையின் வகை AMOLED
பிராசஸர் ஸ்னாப்டிராகன் 765 G
ரேம் மற்றும் ரோம் 8GB மற்றும் 256 GB
பேட்டரி திறன் 4315 mAh
வேகமாக சார்ஜ்
செய்யும் திறன் விவோ பிளாஷ் சார்ஜ் 2.0 (33 W)
முன்பக்க கேமரா 32 MP
பின்பக்க கேமரா 48 MP +13 MP + 8 MP + 8 MP
இரண்டு நானோ சிம்
இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்.................. 
நன்றி !!.............
                                         

Post a Comment