HTTP vs HTTPS || எதுக்கு இது? முழு தமிழ் விளக்கம் || Knowtech Tamil || Tech Explanation

HTTP என்பதன் பொருள் மற்றும் வரலாறு 


உயர் உரை பரிமாற்ற நெறிமுறை (Hyper Text Transfer Protocol) என்பதே இதன் முழு பொருள். வலைதளம் (WEB) உருவாக காரணமாக இருந்த டிம் பெர்னெர்ஸ் லீ 1989 ஆம் ஆண்டு இணையத்தை உபயோகப்படுத்தி வலைதளத்தில் உயர் உரையின் (HTTP) மூலம் அதிக எண்ணிக்கையிலான தகவல்களை உள்ளடக்கிய ஒரு வலைதளத்தை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது .அதன் பிறகு வளைதளத்தில் உயர் உரையின்(HTTP) பங்கு அந்த வானத்தை தொட்டது என்றே கூறலாம்.




இணையத்தை பயன்படுத்தி ஒரு சேவையகத்தில்(Server) உள்ள தகவல்களையோ,காணொளியையோ அல்லது ஒரு புகைப்படத்தையையோ நாம் இருக்கின்ற இடத்தில் நம்மால் காணமுடியும் என்றால் அதற்க்கு காரணம் இந்த உயர் உரை பரிமாற்ற நெறிமுறைதான்(Hyper Text Transfer Protocol).

ஆம் வலைத்தளத்தில் ஒரு இடத்தில் உள்ள தகவல்களை இன்னொரு இடத்துக்கு கொண்டுசேர்க்கும் பங்கு உயர் உரைக்கே உள்ளது. (Hyper Text Transfer Protocol)


HTTPS || HTTP-S-ன்  நுழைவு 

நாளடைவில் உயர் உரையில் (HTTP) சில சிக்கல்கள் தோன்றின, (எ.கா) நாம் உலகத்தில் ஒரு மூலையில் இருந்து எதாவது ஒரு வலைத்தளத்தில் நம்முடைய சுய விவரங்களை கொடுத்து உள்நுழைகிறோம் அப்பொழுது நம்முடைய சுய விவரங்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி குறிப்பிட்ட சேவையகத்துக்கு(Server) செல்லும். 

அவ்வாறு செல்லும் போது இடையில் யார் வேண்டுமானாலும் நம்முடைய விவரங்களை சேகரிக்க முடியும்,அவ்வாறு சேகரிக்கும் பட்சத்தில் அவ்விவரங்களை வைத்து அவர் ஒரு குறும்பர் (Hacker) ஆக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த சுய விவரங்களை வைத்து அவரால் உங்களுக்கு தேவையற்ற தீங்குகளை விளைவிக்க முடியும்.





இதற்க்கு  தீர்வு காணும் விதமாக 1995 ஆம் ஆண்டு உயர் உரை பரிமாற்ற நெறிமுறை - பாதுகாப்பு ஆனது கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கு முன்னதாக 1994 ஆம் ஆண்டு நெட்ஸ்கேப் கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தால் நெட்ஸ்கேப் உலவியில் (Browser)  முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 HTTPS || எவ்வாறு எப்படி செயல்படுகிறது ??...


உயர் உரையில் (HTTPS)  ஒரு தகவலை நாம் அனுப்பும் போது அது தனக்கு தானே சில பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு இணையத்தின் வழியாக செல்கிறது,அவ்வாறு செல்லும் போது யார் ஒருவராலும் அத்தகவல்களை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.

இதற்க்கு காரணம் அந்த உயர் உரையானது பாதுகாப்பு மின்குதைகுழி அடுக்குகள் (Security Sockets Layer)  என்கிற எண்முறை சான்றிதழ் (Digital Certificate) மூலம் பாதுகாக்க பற்றிருக்கும். இந்த பாதுகாப்பு முறையானது நாம் அனுப்பும் தகவல்களை ரகசிய எழுத்துக்களாக (CryptoGraphy) மாற்றி அதை திறக்க ஒரு சாவியையும் தனக்கு தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு மாற்றப்படும் பொழுது அத்தகவல்களை இடையில் வேறு யாராலும் அக்குறிப்பிட்ட சாவியில்லாமல் பார்க்க இயலாது.

HTTP || HTTPS  வேறுபாடுகள் !....


வேறுபாடுகள் என்று பார்க்கும் போது HTTP-ஐ  காட்டிலும் HTTPS யானது தகவல்களை மிக பாதுக்காப்பாகவும் யாரும் எளிதில் தெரிந்துகொள்ளாத வண்ணமும் மாற்றி அனுப்புகிறது. இதனால் நம்முடைய சுய விவரங்கள் பாதுக்காக்கப்படும்,இது நம்மை பல ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும்.

சுவாரசியமான உண்மை:

HTTP-யானது HTTPS-யை காட்டிலும் மெதுவாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு காரணம் அதில் நடக்கும் சுய பாதுகாப்பு நடவடிக்கையே காரணம் (CryptoGraphy).............


இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.................
 

                                                      நன்றி !!.......

No comments