இந்திய விடீயோக்களை நீக்கி டிக்-டாக் அதிரடி,எதற்காக ??காரணம் உள்ளே || Tik-Tok has deleted Indian Videos Why? || Knowtech Tamil

இந்திய விடீயோக்களை நீக்கிய டிக்-டாக் !!

நேற்றைக்கு வந்த வெளிப்படையான தகவலின் படி டிக் டாக் நிறுவனம் கடந்த 6 மாதங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 160 லட்சம் (16 million) விடீயோக்களை நீக்கியுள்ளது.அதே சமயத்தில்  உலகளவில் சுமார் 490 (49 million) லட்சம் விடீயோக்களை டிக்-டாக் செயலியில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 
எந்த வகையான விடீயோக்களை நீக்கியது என்று இன்று வரை டிக் டாக் வெளியிடவில்லை ஆனால் செயற்கை நுண்ணறிவு ரோபோர்ட்கள் (Artificial Intelligence) அவ்வீடியோக்களை பற்றி புகார் வரும் முன்பே நீக்கியது  என்று டிக் டாக் நிறுவனம் கூறுகிறது.அவ்வீடியோக்கள் பெரும்பாலும் அதிக பார்வையாளர்களை பெறாதவை  மற்றும் அவை அனைத்தும் சிக்கலான விடீயோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் இன் அறிக்கையின் படி டிக் டாக்கிற்கு இந்தியாவில் இருந்து 302 அறிக்கைகளும் மற்றும் அமெரிக்காவில் இருந்து 102 அறிக்கைகளும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.யூடுபேயோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இது 2019 ஆண்டின் பிற்பாதியில் நீக்கப்பட்ட விடியோக்கள்  அதிகளவிலான எண்ணிக்கையாக (140 லட்சம் )கருதப்படுகிறது.

இந்நிலையிலும் சீனாவிடமிருந்து தரமிறக்குதலுக்கு எவ்வித கோரிக்கைகளும் கிடைக்கவில்லை என்று டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீக்கப்பட்ட விடியோக்கள் பின்வருமாறு நாடுவாரியாக 


             நாடு                                     

 நீக்கப்பட்ட விடீயோக்கள் 

 
            இந்திய                                          16,453,360

       அமெரிக்கா                                      4,576,888

      பாக்கிஸ்தான்                                  3,728,162

           லண்டன்                                        2,022,728
 
             ரஷ்யா                                         1,258,853


டிக் டாக் இன் செய்தி தொடர்பாளர் கூறியதாவது சீனாவின் வேண்டுகோளை ஏற்று நாங்கள் எந்த ஒரு  விடீயோக்களையும் நீக்கவில்லை, அவ்வாறு கேட்டாலும் நாங்கள் செய்யமாட்டோம் என்று கூறினார்.

மேலும் இந்தியாவை சார்ந்த மற்றும் டிக் டாக் இன் உயர் அதிகாரியான நிகில் காந்தி கூறியதாவது 


  "டிக் டாக் மீண்டும் இந்தியாவில் செயல்படும் பட்சத்தில் முன்புபோலவே இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் என்றும், மேலும் டிக் டாக் பயனர்களின் சொந்த விவரங்கள் எப்பொழுதும் வெளிநாட்டிற்க்கோ அல்லது சீனாவிற்க்கோ விற்கபடாது என்றும்  தெரிவித்தார்". 


இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்....................

                                                          நன்றி !!!!!!



No comments