பாஸ்ட் சார்ஜிங் எப்படி நடக்குது? How The Fast charging works?|| kN0wtEcH Tamil || Tech Explanation
ஸ்மார்ட் போன் சந்தைகளில் அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக ஒவ்வொரு ஸ்மார்ட் போன் நிறுவனமும் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு தள்ளப்படுவதால் ஒவ்வொரு மாடல் அறிமுகப்படுத்தும் போதும் எதாவது ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்துகின்றனர்.அவ்வகையில் கேமரா ரேம் , மற்றும் ப்ரோசிஸோர்க்கு எப்பொழுதும் ஒரு முக்கியத்துவம்  உண்டு.இவ்வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்ட் சார்ஜிங் முறை நாம்  எல்லோரையும் கவர்ந்த ஒரு அம்சம் ஆகும்.
ஒரு விரைவான காலகட்டத்தில் நாம் அனைவரும் நகர்ந்து கொண்டு இருப்பதால் நம்மை சுற்றி உள்ளவையும் அவ்வாறு மாறும் பட்சத்தில் அதை நாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்.உதாரணமாக நமது ஸ்மார்ட் போன் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்து பெறக்கூடிய சக்தியை இதில் சில நிமிடங்களில் பெற்றுவிடலாம்.இதன் தொழில்நுட்பம் குறித்து காண்போம்.
பொதுவாக சார்ஜிங் என்பது பேட்டரிகளை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கக்கூடிய ஒரு நுட்பம்.இதில் இரண்டு வகை உண்டு, ஒருமுறை மட்டும் சார்ஜ் செய்து(One Time Chargeable) பயன்படுத்தக்கூடியது மற்றும் இன்னொன்று பலமுறை சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியது.இதில் இரண்டாவது முறையை நாம் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துகிறோம்.
சாதாரண சார்ஜ் எவ்வாறு நடக்கிறது
![]()  | 
img source Digital Trends  | 
நாம் பயன்படுத்துகிற ஸ்மார்ட் போன்களில் உள்ள பேட்டரிகளில் உள்ள செல்களில் உருவாகிற  வேதியல் எதிர்வினையின்(Chemical reaction)  காரணமாக குறைந்த அல்லது அதிக அணுக்களை கொண்ட எலக்ட்ரான்கள் உருவாகின்றன.இவ்வாறு உருவாகும் எலக்ட்ரான்கள் பேட்டரியின் (Negative)ஒருமுனையின்  வழியாக பயணிக்கும் போது ஸ்மார்ட் போன்க்கு மின்சக்தியை வழங்குகிறது.
சாதாரண பேட்டரிகளில் இந்த நிகழ்வு ஒருமுறை மட்டுமே நிகழும்.மேலும் பேட்டரி சார்ஜ் செய்யும் போது  வேதிய வினையை நிகழ்த்தி மின்சக்தியை சேமிக்கும் மற்றும் பயன்படுத்தும் போது வேதிய வினையை நிகழ்த்தி மின்சக்தியை கொடுக்கவும் செய்யும்.இந்த வேதியல் எதிர்வினையானது திரும்ப திரும்ப நடைபெறும் ஒரு நிகழ்வு.
சார்ஜிங்
பாஸ்ட் சார்ஜிங் பற்றி பார்ப்பதற்கு முன்பு சாதாரண சார்ஜ் எவ்வாறு இயங்குகிறது என்று பார்ப்போம்.சார்ஜ் செய்வதில் நமக்கு அதிகமாக பயன்படுவது வோல்ட்டேஜ்,கரண்ட் மற்றும் பவர் ஆகும்.
உதாரணமாக தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சும் பைப்பை எடுத்துக்கொள்ளவோம். இதில் தண்ணீர் வரும் வேகத்தை வோல்ட்டேஜ் என்று வைத்து கொண்டால் அந்த பைப் இன் அளவு கரண்ட் ஆகும். மேலும் அதில் வரும் தண்ணியின் அளவு பவர் ஆகும்.
இதேபோல் நாம் குடுக்கும் வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட் இன் விகிதத்தை பொறுத்து ஸ்மார்ட் போன் வேகமாக சார்ஜ் செய்யும் அதாவது பவரை அதிகமாக ஏற்றுக்கொள்ளும்.ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது என்னவென்றால் சார்ஜ் கட்டுப்படுத்தி என்கிற சிப். இந்த சிப்பானது பேட்டரிக்கு செல்லும் அதிகப்படியான வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட்ஐ தடுக்கும் வண்ணம் வடிவமைக்க பற்றிருக்கும். 
P=VI
சில USB சார்ஜிங் தரநிலைகள் (Standards) குறித்து காண்போம்
VOLTAGE CURRENT POWERUSB 1.0 5 V 0.5 A 2.5 WUSB 2.0 5 V 0.5 A 2.5 WUSB 3.0 5 V 0.5 A/0.9 A 2.5 W / 4.5 WUSB 3.1 5-20 V 0.5/0.9/1.3/3/5 A 2.5 W to 100 W
பாஸ்ட் சார்ஜிங்
பாஸ்ட் சார்ஜிங் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் USB 3.1 கேபிளானது அதிக வோல்ட்டேஜ் மற்றும் அதிக கரண்ட்ஐ வெளிப்படுத்தும் வண்ணம் தயாரிக்க பற்றிருக்கும் மேலும் அதை பெரும் ஸ்மார்ட் போன்களில் அந்த அதிகப்படியான வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட்ஐ அனுமதிக்கும் மாறியான சிப் பொறுத்த பற்றிருக்கும். 
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்..................
                                                                      நன்றி !...............


Post a Comment