ஒரு மொபைல் போன்க்கு ரேம் முக்கியமா? பிராசஸர் முக்கியமா? || எத பாத்து மொபைல் வாங்கணும் || Difference Between RAM and Processor || kN0w tEcH Tamil
பிராசஸர் மற்றும் ரேம் ஒரு பார்வை
ஒரு கணினியையோ அல்லது ஒரு மொபைல் போனயோ தேர்ந்தெடுக்க நாம்  முக்கியமா கவனிப்பது பிராசஸர் மற்றும் ரேம் தான்.இதன் முக்கியத்துவத்தையும்,வேறுபாடுகளையும் இந்த பதிவில் காண்போம்.
பிராசஸர்
எந்த ஒரு மொபைல் போன் ஆகா இருந்தாலும் செரி கணினியாக இருந்தாலும் செரி பிராசஸர் மிக முக்கியம்.பிராசஸர் என்பது ஒரு கருவியின்(Mobile Phones,Computers etc) மூளை போன்றது,நாம் குடுக்கக்குடிய வேலைகளை எளிதாக மற்றும் வேகமாக செய்ய பயன்படக்கூடிய ஒரு சிறிய சிப்.உதாரணமாக ஒருவருக்கு கால் செய்தல்.
மனிதன் இயங்க மூளை எவ்வளவு அவசியமோ அதே போன்று ஒரு கணினி அல்லது மொபைல் போன்க்கு பிராசஸர் மிக முக்கியம்.ஒரு பிராசஸரின் தரத்தை(Range) பொறுத்துதான் அதன் இதர செயல்பாடுகள் அமையும். உதாரணமாக ஒரு மொபைல் போனின் கேமரா(Camera Spec) மற்றும் கணினியின் வேகம்(Processing Speed).
ரேம்
ரேம் என்பது சீரற்ற அணுகல் நினைவகம்(Random Access Memory).இது ஒரு நிரந்தரமற்ற நினைவகம்(Temporary Storage) என்றும் அழைக்கப்படும்.ஒரு கருவியின்(Computer,Mobile Phones etc) செயல்பாடுகளுக்கு பிராசஸர் எவ்வளவு முக்கியமோ அதே போன்று ரேமும் முக்கியம்.
ஒரு கருவியில்(Computer,Mobile Phones etc) வேலையை செய்ய பிராசஸர் உதவினால் அதன் வேகத்தை உறுதிசெய்வது ரேம்தான்.ரேமின் அளவை பொறுத்துதான் ஒரு கருவியின்(Computer,Mobile Phones etc) செயல்படும் வேகமும் அமையும்.
உதாரணமாக நம் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்து ஆன் செய்து ஒரு ஆப்பை ஓப்பன் செய்தால் அது மிக மெதுவாக ஓப்பன் ஆகும். அதுவே சாதரண சூழ்நிலையில் ஒரு ஆப்பை ஓப்பன் செய்யும் பொழுது அது முன்பை விட மிக வேகமாக ஓப்பன் ஆகும். இதற்க்கு காரணம் ரேம்தான்.
எது முக்கியம் ??
பொதுவாக ஒரு கருவிக்கு(Computer,Mobile Phones etc) பிராசஸர் மற்றும் ரேம் என்பது ஒரு இன்றியமையாத தேவையாக உள்ளது.எனவே ஒரு கருவியை தேர்தெடுக்க இரு கூறுகளும் தேவை.தற்போதைய சூழ்நிலையில் பிராசஸரின் தரம் உயர உயர ரேமின் அளவும் உயருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்..... 
நன்றி.....!


Post a Comment